சாதிய அடையாளம்வேண்டுவோரே
இரட்டைக் குவளை தேநீர் கடை
இருக்கை தனி இடம்
இடுப்பு அணியும் தோள் துண்டு
இடும் சுடும்காடும் தனி
காலணி அறியா வெடித்த கால்
குடிதெரு நுழையத் தடை
குட்டி குழந்தை அழைப்பு டேய்
குப்பா சுப்பா என்று
இறைகுடி நுழையத் தடை நந்நீர்
இல்லை காரணம் தீட்டு
இறப்பெனில் முதல் மரியாதை முனியனுக்கே
இனிய பறை அடிக்க
உடலம் சுமத்தல் சாக்கடனே அலுவல்
உயிர் நாள் வரை
உயர்ந்தனர் பொருள் ஈட்டுதலில் ஆம்
உடை உணவு வழியின்றி
கால்நடை இறப்பு கடுமை அழைப்பு
காலை ஆ உடல் அகற்ற
கழனி வேலை கால வரையற்ற
கஞ்சி பண்ணையாள் உணவு
வழமை இன்றும் சிற்றூர் பலவற்றுள்
வா நேரெதிரே கண்டுணர்
வலி கொண்டவன் அறிவான் முகநூல்
வாய் சொல் வீரனறியான
– கவிஞர் தம்பியின் தம்பி