உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதத்தை முன்னிட்டு ஆபாச வார்த்தைகளுடன் கூடிய பாடல்களையோ, சினிமா பாடல்களையோ ஒலிபரப்பக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், மாவட்ட ஆட்சியாளருக்கு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தான் ‘கன்வாரியா யாத்ரா’ என்ற பெயரில் புனித யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் உள்ள வீதிகளில் மூலிகை தன்மையும் அடர்த்தி நிறைந்து வளரக் கூடிய மரங்களையும் நட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.
குறித்த உத்தரவை அடுத்து, மாநில வனத்துறை அதிகாரிகள் 27 வகையான மூலிகை மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்துள்ளனர். எவ்வாறான மரங்களை நடவேண்டும் என்பது தொடர்பாக, ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் மற்றும் சமஸ்கிருத கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
மேலும், ‘சாவன்’ புனித மாதத்தில் சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து நடைபயணமாக சென்று கோயில்களில் அபிஷேகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது