எமது சமுதாயம் பிற்போக்கான மற்றும் இருண்ட பாதையை நோக்கி பயணிப்பதை தடுத்து நிறுத்த மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 70ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கண்ணியம், உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க ஊடகங்கள் எப்போதும் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் எனவும் இதற்கான பொறுப்பும் கடமையும் ஊடகங்களுக்கு உண்டு என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.