உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலப்பரப்பும் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்தை 27 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குறித்த ஆலயத்தை சுத்தம் செய்து விளக்கேற்றி பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் மக்கள் பரபரப்பாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
1990ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.
27 வருடங்களின் பின் இன்று தமது சொந்த இடத்துக்கு திரும்பியுள்ள மக்கள் மயிலிட்டி அம்மன் ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்த்து மிகவும் கவலையடைந்திருந்தனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் ஆலயத்தின் கூரைகள், மூலஸ்தானம், பலிபீடங்கள், சுவர்கள், தேர்கள், ஆலய சிலைகள் என அனைத்தும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.