நல்லதண்ணீத் தொடுவாய் தொடக்கம் பேப்பாறைப்பிட்டி வரைக்குமான சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் தங்களது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்கின்றனர்.
இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுமார் நான்காயிரத்து 600க்கும் மேற்பட்ட கடற்தொழில் குடும்பங்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலையில் தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகள் மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில்கள் என்பவற்றால் தங்களது தொழில்சார் நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளன.
தங்களுக்கான தொழில்களை மேற்கொள்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தருமாறு இந்த பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது கடற்தொழில் விதிமுறைகளுக்கு அமைவாக தொழில்களைச் செய்வதற்கான முறைகளை விடுத்து சுருக்கு வலை பயன்படுத்துதல், நிபந்தனைகளை மீறிய அட்டைத்தொழில், உழவு இயந்திரங்கள் மூலம் கரைவலைகளை இழுத்தல் உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ளப்படுவதனால் பாரம்பரியமாக தொழில் செய்யமுடியாத நிலையில் இந்தப்பகுதி தொழிலாளர்கள் தங்களது தொழில்களை விடுத்து வேறு தொழில்களுக்கு செல்லும் நிலை காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லாட்சி அரசு தங்களது வாழ்வாதாரத் தொழில்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்த போதும் அவை ஏற்படுத்தித் தரப்படவில்லை. அவற்றை ஏற்படுத்தி தருமாறும் இந்த பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், வட்டுவாகல் ஆற்றில் நூறுக்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் இறால் பிடித்தல் மற்றும் வீச்சு வலைகள் மூலம் தொழில் செய்து வருகின்ற நிலையிலும் முகத்துவாரத்துக்குச் செல்லும் வீதியை உள்ளடக்கிய வகையில் வட்டுவாகல் ஆற்றின் இரு புறமும் கடற்படையினரின் பயன்பாட்டில் இருப்பதனாலும் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும்,முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக கடல்வளத்தை கொண்ட கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி நாயாறு சாலை ஆகிய பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில்களால் தங்களது தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நல்லாட்சி அரசு தங்களுக்கான வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்த பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.