மகளிர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த சுயெதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பற்றிக் சாயமிடும் பயிற்சி நெறி மாவட்ட உதவி அரசாங்க அதிபர் த.பிருந்தாகரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் பற்றிக் சாயம் இடும் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5000 ரூபா பெறுமதியான மூலப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் தொடர்ச்சியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும், இவர்களுக்குரிய மேலதிக பயிற்சிகளும் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.