களுத்துறை மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்று அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மத்துகமை நகரில் தமிழ்ப் பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக நான் சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்தை இன்று அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
மத்துகமை நகரில் தமிழ்ப் பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றுவதற்கு என்னால் இயன்ற சாகல முயற்சிகளையும் எடுப்பேன்.
இதற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் அமைச்சரவைப் பத்திரத்தில் எனது அமைச்சுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரமாகக் கருதி கையெழுத்திட்டிருந்தார்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.