மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.லெம்பேட் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்புவிழா நிகழ்வில் வட.மாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக வட.மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் கலந்து கொண்டதுடன், இவருடன் இணைந்து வட.மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட.மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர், வட.மாகாண சபை அதிகாரிகள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், திணைக்கள தலைவர்கள், மன்னார் நகரசபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், மற்றும் மன்னார் நகரசபைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு உலக வங்கி, அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்கள நிதி உதவி மற்றும் வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் நிதிப்பங்களிப்புடன், வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக்கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது