புதிய 200 ரூபாய் நாணயத் தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய நிதி அமைச்சும் ரிசர்வ் வங்கியியும் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய நாணயத்தாள் அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நாணயத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 200 ரூபாய் நாணயத் தாள்கள் வெளிவரவுள்ளது.
இந்தியாவில் 200 ரூபாய் தாள்கள் வெளிவரவுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.