ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த விசேட சந்திப்பு அஸ்கிரி விஹாரையில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச அரசியல் அமைப்பு நாடு எதிர்நோக்கி வரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் பௌத்த பீடங்களின் பிரதம மாநாயக்க தேரர்கள் கூடி நாட்டின் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.