கறுத்தக் கடவுளர்கள்
கறுத்த மனிதர்கள் இவர்கள்
சிருத்தில் வெடிபொருத்திய
தெய்வத்தின்
பூகோளப்பிள்ளைகள்
தற்கொலை புரிவதற்கு
ஆயிரம் காரணம்
தற்கொடை புரிவதற்கு
ஒரே காரணம் ..
விடுதலை!!!
கனத்த இரவொன்றின்
வெடிச்சத்தத்தில்
டோராக்கள் மூழ்கியதற்காய்
குதூகலித்தோமே!!
அந்தக் குதூகலத்தின்
தொடக்கத்தில்
சிந்தப்பட்டது இவர்கள் குருதி
இவர்கள் பிரபஞ்சத்தின்
வினோதர்கள்
ஏன் தெரியுமா..?
உயிரெனும் உன்னதத்தை
எமக்கு இலவசமாய்
கொடுத்தவர்கள்
இவர்கள் வினோதர்கள்தான்
ஏன் தெரியுமா..?
நீயும் நானும் காதற்கடிதம்
எழுதிக்கொண்டிருக்க
இவர்கள் கரிகாலன் பின் நின்றவர்கள்,
நானும் நீயும்
குழந்தைகள் பற்றி சிந்திக்கையில்
இவர்கள் சிற்றின்பத்தை துறந்தவர்கள்,
நாங்கள் கத்தி வெட்டியதற்கு
கட்டுப்போட்ட போது
இவர்கள் உடலை வெடிக்கக் கொடுத்தவர்கள்,
நாம் பட்டப் படிப்பை
கனவு காணும்போது – இவர்கள்
ஈழத்தை இதயத்தில் வைத்தவர்கள்,
நாம் மரணம் பற்றி
பயந்து இருக்கையில்
இவர்கள் மரண நாட்களை விரல்களால்
எண்ணியவர்
ஆதலால் உலகின் அழுக்குக் கண்களுக்கு
அவர்கள் வினோதர்கள் தான்
கறுத்த மனிதர்களே!!
தியாக தீபங்களாய்
துயிலும் இல்லங்களில்
வாழ்ந்தவரே!!
உம் உடல் தொடக்கூட
அருகதையற்றவரானோமே
எம் உத்தமரே
கடல் அழியலாம்
கடவுள் இல்லையென்றாகலாம்
ஆனால் உம் புகழ் மட்டும்
என்றும் மங்காது
அனாதியன்