வடக்கில் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிரபாகரனின் இரும்புப் பாத பிடிக்குள் இருந்து விடுபட்ட வடக்கு மக்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. போரால் இடம்பெயர்ந்தவர்கள் இங்கு வர வேண்டும். அவர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தெற்கில் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நாட்டில் எவருக்கும் எங்கு வாழும் உரிமையும் இருக்கின்றது. ஆனால், வடக்கின் நிலைமை வேறாக இருக்கின்றது. நாக விகாரையில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.
முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு போர்க்கொடி தூக்கப்பட்டு, விகாராதிபதியை வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு இப்படியொரு நிலை இருக்கும்போது இங்கு எப்படி வேறு கோணத்தில் சிந்திப்பது? இந்நிலை மாற வேண்டும்” என்றார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “வடக்கிலுள்ள கோயில்கள்தான் உடைக்கப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டினார்.