கொழும்பு உயர் நீதிமன்றில் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதுடன், கொழும்பு உயர் நீதிமன்றின் நீதிபதி பியசேன ரணசிங்க இந்த வழக்கு குறித்த தீர்ப்பினை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொம்பே பிரதேசத்தில் துருலாந்தி அன்தனி ரம்சான் ஜோர்ஜ் என்ற நபருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
மெல் குணசேகரவின் வீட்டுக்கு நிறம் பூசும் பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் வீட்டை கொள்ளையிட முயற்சித்துள்ளார்.
கொள்ளையிடச் சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக ஊடகவியலாளர் மெல் குணசேகர வீட்டில் இருந்த காரணத்தினால் பாண் வெட்டும் கத்தியைக் கொண்டு அவரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன், மெல் குணசேகர இலங்கையின் மிகப் பிரபலமான பெண் ஊடகவியலாளர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.