சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
கட்டாருடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் எனில், தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வளைகுடா நாடுகள் கோரியுள்ளன.
அப்படியில்லை என்றால் கட்டார் மீது மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என குறித்த நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எப்படியிருப்பினும் தம்மிடம் முன்னைக்கப்பட்டுள்ள இவ்வாறான நியாயமற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென கட்டார் தெரிவித்துள்ளது.
நியாயமான நிபந்தனைகள் முன்வைத்தால் மாத்திரமே தாம் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஆயத்தம் என கட்டார் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள், கட்டாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.