யாழ்ப்பாணம் திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ‘ தேத்தா விருட்ச நாயகி அறநெறிப் பாடசாலை’ 05.07.2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது ஆலயத்தில் நேற்று மாலை 5 மணியளவில் விசேட வழிபாடு ஆராதனைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில் ஆலய நிர்வாகத் தலைவர் திரு.சு.கருணாநிதி மற்றும் ஆலய பிரதம குரு க.சுதாகரக்குருக்கள் மற்றும் செல்வி தங்கப்பொன் ஓய்வு நிலை ஆசிரியர் மற்றும் திரு.சி.மதியாபரணம் ஓய்வு நிலை பொறியிலாளர் மற்றும் காளிகோவிலடி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஆலய நிர்வாகிகள் , அறநெறிப் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்
இப்பாடசாலையானது பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது திருநெல்வேலியில் பல ஆலயங்கள் இருக்கின்றபோதும் இப்பகுதியில் முதன் முதலாக அறநெறிப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது மிகவும் வரவேற்கதக்க விடயம் என விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருந்தார்கள்.