மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஸ்ரீ ஞான சக்தி சித்திவிநாயகர், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு கடந்த 03.07.2017 அன்று ஸ்ரீ ஞான சக்தி சித்திவிநாயகப் பெருமானின் விஷேட அபிஷேக பூசையுடன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கும்பம் ஏற்றும் நிகழ்வுடன் ஆரம்பமானது!
அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது!
ஆலய விழாக்குழு மக்களாளும் நடாத்தப்பட்டுவரும் நிலையில் நேற்று 06.07.2017 அன்று விசேட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது! இதன்போது விழாக்குழு மக்களால் மதிய நேர அன்னதானமும் வழங்கப்பட்டது!
அதனைத் தொடர்ந்து மதிய நேரப் பூசை ஆரம்பமானது பூசைகள் அனைத்தும் நிறைவுற்ற பின் காந்தள் புலம்பெயர் இளையோரால் இரவு நேர விஷேட அன்னதானமும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது! இவ் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்களும் கலந்துகொண்டார்!
அன்னதான நிகழ்வு நிறைவுற்ற பின் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நாவலர் கலைக்கழகத்தின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது! கலை நிகழ்வினை நாவலர் கலைக்கழகத்தின் உறுப்பினர் சி.மயூரன்
தலைமையில் கலை நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது!
இந்த கலை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்! நாவலர் கலைக்கழகத்தினரால் முன்னாள் கலைஞர்கள் கௌரவிப்பும் நிகழ்ந்தது!
ஆலயத்தின் சிறப்பம்சங்கள்!
ஆலயத்தின் உற்சவம் ஆரம்பமாகுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கிராம எல்லைக்குள் எந்த ஒரு பொது மக்களும் மாமிசம் கொண்டுவர முடியாது!
ஆலய உற்சவ காலத்தில் மதாவிடாய் பெண்கள் கிராமத்தில் இருக்க முடியாது!
வீடு வீடாக தேவாதிகள் (தெய்வங்கள்) சென்று மக்களுக்கு அருள் கடாட்சம் கொடுத்தல்!
இவ்வாறு பல சிறப்பம்சங்களுடன் மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஸ்ரீ ஞான சக்தி சித்திவிநாயகர், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் எந்த ஒரு ஆலயங்களிலும் நிகழாத பல சிறப்பம்சங்களுடன் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது!