பெருமாள் கணேசன் தரம் 3ஐச் சேர்ந்த அதிபருக்கு கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து 07.07.2016அன்று கிளிநொச்சி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்குமாறு கடிதம் வந்திருந்த நிலையில் 07.06.2016 அன்று அவருக்கு கலைமகள் வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்கக்கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் செயற்பட்டனர்.
இது தொடர்பாக சிறிதரன் ஊடகவியலாளர் ஒருவரை கீழ்த்தரமாகத் திட்டும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த அதிபர் நியமனம் தொடர்பாக சிறிதரனின் தம்பியார் இயக்கும் தமிழ் வின் ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பையெடுத்த சிறிதரன் இதில் தான்தான் தலையிட்டதாக குறித்த ஊடகவியலாளருக்குத் தெரியப்படுத்தியும் அவர் அச்செய்தியைப் போட்டதாகவும், அவனொருவன் வடக்கத்தையான் செய்யிறான் என்றால் அவனோடு சேர்ந்து நீங்களும் செய்யிறீர்கள் என மிக மிக கேவலமான முறையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருக்கிறார்.