மட்டக்களப்பு மாவட்டம் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை முஸ்லிம் நபரொருவர் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம் 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையுடன் இணைந்ததாக மைதானம் காணப்படுகின்றது.
இந்நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த சரிபுத்தம்பி புகாரி முகம்மது என்பவர் திடீரென அவ்விளையாட்டு மைதானத்தின் கிழக்குப் பகுதியில் மைதானத்திற்குக் குறுக்காக வேலியமைத்து அப்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பிரதேசத்து தமிழ் மக்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைக்காலங்களில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிடப்பட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.