மயிலிட்டித் துறைமுகம் விடுவிப்பு என்பது ஒரு அரசியல் நாடகம் எனவும், அடுத்த தேர்தலின்போது மயிலிட்டி மக்கள் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் மயிலிட்டி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துறைமுகம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது, மக்களின் குடியிருப்புப் பகுதி விடுவிக்கப்படவில்லை. அப்படியாயின் நாம் எப்படித் தொழில் செய்வது எனவும் அம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்?
அத்துடன், விடுவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் இராணுவம் கம்பிக்கட்டை போட்டி வேலி அடைப்பதாகவும், மயிலிட்டிச் சந்தியையும், துறைமுகத்தையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் எந்தவொரு மக்களின் வீடுகளும் உள்ளடக்கப்படவில்லையெனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களது குடியிருப்புப் பிரதேசம் விடுவிக்காது தாம் நீண்ட தூரத்திலிருந்தே தொழிலுக்கு வருவதாகவும் இதன் காரணமாக தம்மால் தொழில்செய்யமுடியாதிருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் முகாம்களில் வாழும் ஏனைய மக்களை எப்போது விடுவிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏசி வாகனங்களில் வருபவர்களுக்கு அரிசி, சீனி போன்ற பொருட்களின் விலைகள் தெரியுமா எனவும் கேள்வி எழுப்பிய அவர்கள் இவையனைத்தும் ஒரு அரசியல் நாடகம் எனத் தமக்குத் தெரியும் எனவும் அடுத்த தேர்தலின்போது தாம் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.