போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதென சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபலமான மடுத் தேவலாயம் மற்றும் வில்பத்து சரணாலயம் போன்ற மக்களைக் கவரும் பல இடங்களை மன்னார்மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன எனவும் அச்செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.