உண்மையில் நடந்தது என்ன….?
அனைவருக்கும் வீடு என்ற ஒன்று அத்தியாவசியமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. அந்த வகையில் ஞானம் பவுண்டேசன் லைக்கா நிறுவனமானது வவுனியாவில் மேற்கொண்ட முயற்சி வரவேற்கத்தக்கது.
ஆனால் அவர்கள் நடந்து கொள்கின்ற நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் செயலாக அமைந்து விட்டது.
முற்று முழுதாக வேலைகள் முடிந்தது என்று சொல் முடியாது.யன்னல் கம்பிகள் இல்லை குடிநீர் வசதிகள் செய்யப்படவில்லை கிராமிய அமைப்பிற்கு அதாவது காட்டு மண்ணிற்கு அமைவான அத்திவாரங்கள் இடப்படவில்லை. இது பலதரப்பட்ட உத்தியோகத்தர்களினால் கூறப்பட்ட உண்மைகள். அத்தோடு சம்மந்தப்பட்ட நிறுவனம் பணத்தை மட்டும் தேவையற்று இறைத்தது. 5000 பேருக்கு ஆட்துக்கறியுடன் உணவு அதுவும் லண்டனில் இருந்து வந்த சமையல்காரர்களினால்.ஏன் இந்த வேண்டா வேலை எனப் பலர் முகம் சுழித்தனர். 20 00000 ரூபா செலவில் விழா ஒழுங்கமைப்பு. ஆனால் கலந்து கொண்ட மக்களோ ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு வரையிலேதான். இவ்வளவு ஏற்பாடும் வீணாணது என்பதே உண்மை.
வவுனியா மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர் ஏனைய உத்தியோகத்தர்களை முன்னிறுத்தவோ மரியாதை செய்யவோ அவர்கள் நினைக்கவில்லை. மாறாக அவமரியாதை செய்தது போலே நடந்து கொண்டனர்.
இதனால் மாவட்ட செயலரும் ஏனைய உத்தியோகத்தரும் இடை நடுவே வெளியேறியதும் உத்தியோகத்தர்கள் பலரும் அவ்விடம் விட்டகன்றதும் உண்மையே
நேரகாலம் பாராது கடமை செய்தவர்கள் கவலை கொள்ள வைத்ததுடன் சம்மந்தமே இல்லாதவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
எந்த ஓர் அரசியல் வாதியின் பங்களிப்பும் இதில் இல்லாத போது அவர்களின் அரசியல் பேச்சுக்கு இடம் கொடுத்தது ஏனோ தெரியவில்லை.
இந்த வீட்டுத்திட்டத்திற்காக காடுகளை ஒதுக்கியது பிரதேச செயலகம்.அத்தோடு சுற்றியுள்ள அனைத்து சூரிய மின்கலங்களை பொருத்தியது பிரதேச செயலகம். கிரவல் கொடுத்தும் மணல் அனுமதிகளை வழங்கியதும் பிரதேச செயலகம்.
அந்த இடங்களில் நின்ற பாலை மரங்களைத் தறித்தே வீட்டிற்கு கூரை போடப்பட்டது. ஆனால் இவ்வளவு செய்த பிரதேச செயலகத்தை அவர்கள் அவர்களுக்குரிய காரியங்களை செய்ய விடாது தமது பண ஆதிக்கத்தை மேற்கொண்டனர் என்று பயனாளிகள் சிலர் கூறிக்கொண்டனர்.
பத்து லட்சம் பெறுமதி எனக் கூறப்பட்ட வீடு ஆறு தொடக்கம் ஏழு லட்சம் வரைக்குள் முடிக்கப்பட்டது என்பதே உண்மை.
ஆக ஏமாற்றப்பட்டது யார் என்பது யாருக்குத் தெரியும்.
இவ்வளவு ஆடம்பரம் செய்தும் அவை புஸ்பவாணம் ஆகிப்போனதே உண்மை. மனித உணர்வுகளை மதிக்காது பணத்தை மட்டும் விசிறினர்.
வீடுகளில் சமயலறை அடுப்புகளே இல்லை. சுவாமி அறையில் படம் வைக்க எந்த ஏற்பாடும் இல்லை. ஆக வீடு கட்டி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது.
இவர்கள் தங்கள் விளம்பரத்திற்காக இப்படி ஒரு செயல் செய்ததும் தம்மைத்தாமே மேடையில் மார்தட்டிப் பேசிக்கொண்டமையும் அவர்களின் சின்னத் தனமான செயற்பாடுகளாக அமைந்தது.
அனைத்திற்கும் மேலாக ஒரு பாரம்பரிய கிராமத்தின் பெயரை தங்கள் புகழுக்காக யாருடைய அனுமதியும் இன்றி மாற்றியது எவ்வகை ஏற்புடைது என்பது புரியாதுள்ளது.
கிராம மக்கள் பலர் இது பற்றி சம்மந்தப்பட்ட பல உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர்களின் சரியான பதிலினை ஏற்பதாக இல்லை. இராசபுரம் கிராமம் ஞானம் கிராமமாக மாற முடியாது என வாதாடுகின்றனர்
அப்படியானால் இந்தியன் வீட்டுத்திட்டம் இந்தியன் கிராமம் எனவும்
SDC வீட்டுத்திட்டம் SDC கிராமம் எனவும்
UN வீட்டுத் திட்டம் UN கிராமம் எனவும்
இப்படி ஒவ்வொரு வீட்டுத்திட்ட நிறுவனமும் தங்கள் பெயரை வைக்க எண்ணினால் என்னாவது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக நகரசபைச் செயலாளருடன் கதைக்க இருப்பதாகவும் கூறினர். வீடு தந்தாலும் தந்தனர் கூட பல கசப்புகளையும் பாரம்பரியங்களை இழக்கும் செயல்களையும் செய்து விட்டனர் என மனம் நொந்து கொண்டனர் பலர்.
நன்றி
– தழிழ் அருள்