சிறிலங்காவில் இனிவரும் காலங்களில் எதேச்சதிகார ஆட்சிக்கோ, இராணுவ ஆட்சிக்கோ இடமில்லையென சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்கமுவவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாளுடன் எதேச்சாதிகார ஆட்சிமுடிவுக்கு வந்துள்ளது.
இனிமேல் ஒருபோதும், அத்தகைய ஆட்சிக்கு நாட்டில் இடமில்லை.
சிலர் அதிகாரத்துக்கு வருவதற்காக செய்கின்ற சூழ்ச்சிகளை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த முறைகேடும் நடந்திருந்தால் அதனை வெளிப்படுத்துமாறு சிலர் சவால் விடுத்தனர்.
இப்போது, முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்று இப்போது எம்மால் மக்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.