தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மைய காலமாக சந்தித்து வருகின்ற கடும் எதிர்ப்புக்களின் தொடராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு செருப்பால் அடிப்போம் என இளைஞர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஆதரவு தெரிவிக்காமை, இறுதிப்போரில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என சர்வதேசத்தி மத்தியில் தெரிவித்தமை உட்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து குறித்த இளைஞர்கள் சம்பந்தனுக்கும் அவருடைய கட்சியினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்ற கூட்டமைப்பின் உயர்மட்டம் பல்வேறு வகையிலான எதிர்ப்புக்களைச் சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.