பிரித்தானிய பிரதமர் திரேசா மே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பை சந்திக்க உள்ளார். இரு நாடுகளின் தலைவர்களும் தற்பொழுது ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடைபெற்று வரும் ஜீ20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு சமாந்திரமாக இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
பிரிடெக்ஸிற்கு பின்னரான விடயங்கள் குறித்து திரேசா மே, அமெரிக்க ஜனாதிபதியை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதனை அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.
இந்த தீர்மானம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு திரேசா மே, அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது