மதிப்பிற்குரிய அமைச்சர் Denis Llb அவர்களுக்கு,
ஒவ்வொரு தடவை இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும் போதும் இதைக் கேட்க வேண்டும் என்று மனம் உந்தும். ஆனால், ‘நமக்கென்ன!’ என்று கடந்து போய்விடுவேன். ஆனால், அப்படி பொறுப்பற்று கடந்து போவது ஒரு ஜனநாயக நாட்டில் அதுவும் ஒரு ஜனநாயக மாகாணத்தில் முறையல்லவே. அதுதான் இந்தத் தடவை கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தேன்.
அதாவது, வாழ்வாதார உதவி என்கின்ற பெயரில் ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு’ வழங்கப்படும் இவ்வாறான உதவிகளின் உண்மையான ‘impact-result’ என்ன? அதைத் தங்களுடைய அமைச்சு உதவி வழங்கிய பின்னர் முறையாகக் கண்காணிக்கிறதா?
அதிகமான இவ்வாழ்வாதார உதவிகள் one off distribution ஆக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்த உதவியை சரியாக பயன்படுத்தி, நீங்கள் சொல்கின்ற அந்த வாழ்வாதார ‘முன்னேற்றம்’ tangible impact ஆக நிகழ்கிறது என்பதை உங்கள் அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும். வெறும் cash ஆகவோ அல்லது in-kind ஆகவோ உள்ளீடுகளை வழங்கிவிட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் இப்பொழுது முன்னேற்றம் அடைந்துவிட்டது என பெருமைப்பட்டுக்கொள்ள முடியாதே. அரசியலுக்கு வேண்டுமென்றால் அதுவொரு நல்ல impact ஆக இருக்கலாம், வறுமைப்பட்ட மக்களுக்கு?
வாழ்வாதார உதவிகளின் மிக முக்கியமான கூறுகளாகிய proper usage of inputs, available skills – if not additional skill support, capacity, motivation, sustainability போன்ற விடயங்களை தங்கள் அமைச்சு முறையாக கரிசனையில் எடுத்து பணியாற்றுகிறது என நம்புகிறேன். இல்லாவிட்டால் இந்த உதவிகள் பயனற்றவை என்பதை நீங்கள் நிச்சயம் அறியாமல் இருக்கமாட்டீர்கள்.
அப்படி உங்கள் பயனாளிகள் இந்த inputs களை முறையாகப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டி, வாழ்வாதாரத்தை இன்னும் முன்னேற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் முறையான project management system பயன்பாட்டில் இல்லையென்றால், இத்திட்டங்களை நிறுத்திவிட்டு மேற்சொன்ன விடயங்களில் உடனடியாக கரிசனை செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் இத்திட்டங்களின் சரியான impact புரியும். மக்களுக்கும் அதுவொரு பயன்மிக்க திட்டமாக இருக்கும். அதாவது இங்கு quantity அல்ல, quality தான் முக்கியம்.
‘Distribution’ of livelihood means never improve any forms of livelihood, but their proper usage and implementation make the sustainable differences.
இது உண்மையில் உங்களால் வழங்கப்படும் ஒரு மிகப்பெரிய, பயன்மிக்க மனிதாபிமான உதவித்திட்டம். A significant amount of money இங்கு அள்ளிக் கொட்டப்படுகிறது. ஆதலால் அதன் வெளியீடு (outcome) tangible ஆக இருக்கவேண்டும். அவர்கள் அந்த inputs களை பயன்படுத்துவதும், அதன் மூலம் முறையாக வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தி (implement), இலாபம் ஈட்டி, அவற்றை நிலைக்க வைப்பதும் (sustainability) உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை உங்கள் அமைச்சு நிச்சயம் செய்யும் – செய்ய வேண்டும்.
நன்றி.