மணல்காட்டில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகிய சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துன்னாலைப் பகுதியில் வீதியை மறித்து ரயர்கள் எரித்துள்ளதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன்னாலை, கலிகைச்சந்திக்கிடையிலான வீதியிலேயே ரயர்கள் கொழுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இன்று பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் பயணத் தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.