யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களின் வாகனத்தினைச் சோதனைக்காக காவல்துறையினர்மறித்தபோது நிறுத்தாமற் சென்றவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே மேற்படி இளைஞர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
இதனால் குறித்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் வாகனங்கள் மீது பொது மக்கள் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலமையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து மேலதிகமாக காவல்துறையினர் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.