காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் அண்மைக்காலமாக தொடர்ந்து வன்முறை, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், ‘காஷ்மீரில் பாரதிய ஜனதா- மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணியால் இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் இலாபத்துக்காக அப்பாவி இந்தியர்கள் உயிர் தியாகம் செய்து வருகிறார்கள்.
மோடியின் தவறான கொள்கைகள் காரணமாகவே காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.