இந்நிலையில் நெடுந்தீவின் வனாந்திர பகுதியில் உள்ள 500ற்கு மேற்பட்ட குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் நீரின்றி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
வடபகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மனிதர் மட்டுமன்றி விலங்கினங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் வறட்சி காரணமாக பாரம்பரியமிக்க குதிரை இனம் முற்றாக அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலையில், விலங்கினங்களை பாதுகாக்கும் நோக்கில் லங்காசிறி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.
வறட்சி காரணமாக நீரின்றித் தவிக்கும் குதிரைகள் மற்றும் ஏனைய கால்நடைகளுக்கும் நீர் விநியோகம் செய்ய உதவி வழங்கியது.
அதன்படி முதற்கட்டமாக நெடுந்தீவு மேற்கு பகுதியில் கால்நடைகளுக்கு நீர் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியினை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு முன்னெடுக்க லங்காசிறி குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தப் பகுதியில் தொடர்ந்தும் வறட்சி நிலை நீடிப்பதால், விலங்கினங்களை காப்பாற்ற நீர் அவசியமாக உள்ளது.
இந்த அவல நிலையை உணர்ந்து தன்னார்ந்தவர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தப் பகுதியிலுள்ளவர்கள் தயாராக உள்ளனர்.
நெடுந்தீவு மேற்கு பகுதியிலுள்ள விலங்கினங்களுக்கு சுமார் ஐயாயிரம் லீற்றர் நீர் தேவைப்படுகிறது. இதற்கான செலவினம் 5000 ரூபாவாகும்.
விலங்கினங்களின் மீது அன்புள்ளவர்கள் முன்வந்து உதவிகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.
உதவிகளுக்கு- உதயகுமார் மதிவண்ணன் 0094771254410