டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அபாச்சி மாடல் டெஸ்டிங்கில் சிக்கியுள்ளது. புதிய மாடல் பார்க்க RTR 200 4V போன்ற வடிவமைப்பை கொண்டுள்ள போதும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் 150 சிசிக்கும் அதிகான பிரிவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ்-இன் அபாச்சி 160 சிசி பழைய மாடலாகி விட்டது. பல்வேறு போட்டி நிறுவனங்களும் புதிய மாடல் பைக்குகளை வெளியிட்டு வரும் நிலையில், டி.வி.எஸ். புதிய மாடல் பைக் ஒன்றை தயாரித்து வருவது டெஸ்டிங்கின் போது தெரியவந்துள்ளது.
டி.வி.எஸ். அபாச்சி RTR 160 2017 மாடலாக இது இருக்கும் என்றும் இது துவக்க ரக அபாச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் அபாச்சி RTR 160 மாடலில் மட்டும் வழங்கப்பட்டுள்ள டிரம் பேக் அந்நிறுவனம் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாகனத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிய ஃபிரேம் கொண்டுள்ள பைக்கில் டிவின்ஷாக்கிற்கு பதில் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. புதிய சைடு பேனல் மற்றும் RTR 200 மாடலில் வழங்கப்பட்டுள்ளதைப் போன்ற டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால், அதிகப்படியான தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் டெஸ்ட் டிரைவிங் செய்யப்பட்ட புதிய டி.வி.எஸ். RTR பைக்கில் எவ்வித ஸ்டிக்கர்களும் இடம்பெறவில்லை. மாறாக ஸ்ப்லிட் சீட் இல்லாத சாதாரண சீட்டிங் அமைப்பு, ரியர் டிரம் பிரேக், கிக் ஸ்டார்ட்டர் மற்றும் சில்வர் கலர் சைடு பேனல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய டி.வி.எஸ். பைக் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய மாடல் அபாச்சி RTR 160 சிசி அல்லது RTR 180 சிசி கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும்.