புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டசம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரைத் தப்ப விட்ட காவல்துறை அதிகாரியான முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவே குற்றதடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்ப்பட்டுள்ளார்.
லலித் ஏ ஜெயசிங்க தற்போது மத்திய மாகாண பிரதிக் காவல்துறைமா அதிபராகப் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடமாகான பிரதிக் காவல்துறைமா அதிபரான லலித் ஏ ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.