ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எமர்ஷன் வெளியிட்ட கருத்துக்கள் தொடா்பில் கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சா் இதனை தெரிவித்துள்ளாா்.
எமா்ஷன் தொடா்பில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ள நீதி அமைச்சா், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை எமர்ஷன் வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளதோடு, அவரை ராஜதந்திரமற்றவர் எனவும் விமா்சித்துள்ளாா்.
மேலும், இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.