சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா மற்றும் கமரூன் போன்ற ஏழு நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இவ்வாறு சோதனை நடத்தப்பட உள்ளது.
தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு சோதனை நடத்தப்பட உள்ளது.
கானா, நைஜீரிய பிரஜைகள் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பிலும் பாகிஸ்தான் பிரஜைகள் புகலிடக் கோரிக்கை தொடர்பிலும் கண்காணிக்கப்பட உள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் உகண்டா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.