ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் உத்தர பிரதேசத்தின் மதுராவை, இந்த வருட இறுதிக்குள் சுற்றுலாத்தளமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது.
கிருஷ்ணர் பிறந்த இடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த சுற்றுலாத்துறை அதிகாரிகள், அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் மதுராவை சுற்றுலாத் தளமாக மாற்றவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக கிருஷ்ணரின் பிறப்பு முறை மற்றும் செயற்கை முறையில் யமுனை நதியை அமைத்தல் உள்ளிட்ட பல தத்ரூப காட்சிகளை கொண்டு இச் சுற்றுலாத்தளம் அமைக்கப்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.