ஈரானின் டெக்ரான் நகரில் ஷார் இ மெட்ரோ ரயில் நிலையத்தில், மத குரு மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது அருகில் இருந்த மற்றொருவர் மீதும் கத்திக்குத்து மேற்கொல்லப்பட்டதாக ஷார் இ மாவட்ட துணை ஆளுனர் ஹாதி டாம்ஹிதி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மெட்ரோ ரயில் நிலைய செய்தி தொடர்பாளர் குறிப்பிடுகையில், இந்த சம்பவத்துக்கு பின்னர் இப்போது ஷார் இ மெட்ரோ ரயில் நிலையத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
ஆனால், கத்திக்குத்து நடத்தப்பட்ட மதகுருவின் நிலை, எதற்காக அவர் மீது கத்திக்குத்து மேற்கொல்லப்பட்டது ஆகிய விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.