கிழக்கு மாகாணத்தில், மாகாண நிர்வாகத்தின் கீழ் 13 ஆதார வைத்தியசாலைகளும், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் நான்கு வைத்தியசாலைகளும் என மொத்தமாக 17 ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. இந்த விடயத்தை மத்திய அரசும் ஆச்சரியமாக நோக்குகின்றது.
எனினும், வைத்தியர், தாதியர், மருத்துவ ஊழியர்கள் போன்ற ஆளணி பிரச்சினைகளை கிழக்கு மாகாண சுகாதாரத்துறை எதிர்நோக்கி வருகின்றது.
இப்பிரச்சினைகள் முழு இலங்கையிலும் காணப்பட்டாலும், அரசியலமைப்பில் உள்ளவாறு அதிகாரத்தை மத்திய அரசு வழங்கினால், இவ்வாறான பிரச்சினைகளை மாகாண மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.
மேலும், மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்திற்கேற்ப வளப்பங்கீடுகள் இடம்பெற்றேயாக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.