தாயகம் மென்னும் எம் வீட்டினிலே தோழா!
தறிகெட்ட நரிகளின் ஆட்டம் – அதன்
வால்பிடிக்க ஒரு கூட்டம்- அட
காவியுடைகளை போர்த்திக்கொண்டு தமிழர்
தலைகளின் மேல் தினம் நாட்டம் – மீண்டும்
ஓங்கி அடி பிடிப்பார்கள் ஓட்டம்
ஈழத் திருநாட்டை ஆழப்பிறந்தவர்
இன்றில்லை என்பதா கவலை – இது,
நிலையில்லை விட்டொழி கவலை – தம்பி
தானும் பெரியதோர் வீரனென்று தினம்
கத்தித் திரிந்திடும் தவளை –
அதை பிடித்து உண்ணவரும் முதலை
சாமத்தில் கேட்டிடும் வேட்டின் அரவத்தை
கேட்டுப் பயந்ததோர் காலம்
எம்மை கொல்ல வந்ததொரு சாலம் – பின்பு
எட்டுத்திசைகளும் எம்மவர் ஆட்சியில்
இல்லாதொழிந்தது மாலம் – தம்பி
பொன்னென மிளிர்ந்ததெம் மீலம்
நாட்டைபிடித்து எம் வாழ்வைச் சிதைத்திட
போட்டனர் சிங்களர் கூத்து – இன்று
காட்டையும் அழிக்கிறார் சேர்த்து – தம்பி
அன்னை நிலத்தினை அழிக்கப் –
பகை வரும் பாதையை இன்றுடன் சாத்து
ஒற்றுமையாய் கைகள் கோர்த்து
அடிமை நிலைக்குள் ளமிழ்ந்தும் புரண்டும்
துயர் மேவிக்கிடந்ததெம் வாழ்வு- மிக
விரைவில் மறையுமெம் தாழ்வு – தோழா!
பாழும் நிலைக்குள்ளெம் காலம்
புதைந்தாலும் மாறவில்லை இன்னும் சால்பு – தொடர்ந்து அணையட்டும் விடுதலை வேள்வு!
அனாதியன்