ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ்சை ஈரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரீப் (Javad Zarif) நேரில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் மத்தியகிழக்கில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிராந்திய ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை தீர்ப்பது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், அரசியல் ரீதியான குழப்ப நிலைமைகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பு நிறைவு பெற்றவுடன் வெளிநாட்டு உறவுகளுக்கு பொறுப்பான சபையிலும் ஸரீப் உரையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.