இஸ்ரேலில் புதிதாக அமுல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் நேற்று அல் அக்சா எனும் பகுதிக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் மூடப்பட்டு கிடந்த புனித தளம் ஒன்று நேற்று முன்தினம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் அதன் வாசலில் உலோகத்தில் அமையப்பெற்ற கண்டுபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன.
அந்த நடவடிக்கைக்கு பல முஸ்லிம் சபைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், பலஸ்தீனியர்கள பலர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கலைக்கும் பொருட்டு இஸ்ரேல் படையினர் கிரனைட் குண்டுகளை பயன்படுத்தியதாக இது தொடர்பில் வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன.