நாவற்குழியில் அமைக்கப்பட்டு வந்த சிறீ சமிதி சுமண விகாரையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
நாவற்குழியில் மகிந்தராஜபக்ஷ காலத்தில் அத்துமீறிக் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் புத்த விகாரையொன்று கட்டப்பட்டது.
இதற்கு சாவகச்சேரிப் பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லையென பிரதேச சபையினால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜூலை 7ஆம் நாள் கட்டுமானப் பணியை ஆரம்பிப்பதற்கு சாவகச்சேரி நீதிமன்றம் அனுமதியளித்தது.
60 அடி உயரத்தில் 10 இலட்சம் ரூபா செலவில் இந்த தாதுகோபம் அமைக்கப்படுகிறது.
இது தொடர்பாக சிறீ சமிதி சுமண விகாரையின் விகாராதிபதி ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கிலுள்ள கடும்போக்கு அரசியல்வாதிகளாலேயே விகாரை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.