சுவிட்சர்லாந்து நாட்டில் செல்லமாக வளர்த்த நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர் குறித்து தகவல் அளித்தால் 2000 பிராங்க் பரிசு வழங்க உள்ளதாக உரிமையாளர் அறிவித்துள்ளார்.
டிசினோ மாகாணத்தில் உள்ள Bellinzona என்ற நகருக்கு அருகில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள குடியிருப்பில் நபர் ஒருவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
ஜாக் எனப் பெயரிடப்பட்ட 4 வயதான அந்த நாய் அனைவரிடமும் அன்பாக பழகும் என்பதால் அப்பகுதில் மிகவும் பிரபலமான நாயாக வலம் வந்துக்கொண்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று உரிமையாளரின் நண்பர் ஒருவர் ஜாக்கை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஒதுக்குப்புறமாக சென்றபோது நாய் திடீரென அந்நபரை பிரிந்து சென்றுள்ளது. பல இடங்களில் தேடியும் நாய் கிடைக்கப்பெறவில்லை.
நாய் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் ஜாக்கை தேடி சென்றபோது ஓர் இடத்தில் ஜாக் பிணமாக கிடந்ததைக் கண்டு பொலிசார் மற்றும் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘என்னுடைய நாய் யாரை பார்த்தும் குரைக்காது. அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் நன்றியுடனும் பழகும்.
வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்த்த நாயை யாரோ துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.
நாயை சுட்ட நபர் குறித்து தகவல் அளித்தால் அவருக்கு 2,000 பிராங்க் பரிசு வழங்க உள்ளதாக உரிமையாளர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.