மீண்டும் வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டால், ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் யாவும் வடக்குக் கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கி நாளிதளொன்றுக்குச் செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவானதாக இல்லையெனவும், தமிழ் மக்களின் பிரச்சனை ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரியாக புரியவைக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவதில் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனத்தெரிவித்த அவர் சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே வழியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க வேறு தலைமை அவசியம் என ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கையில்,
தமிழ் அரசியல்நிலைத்திருப்பதற்கு ஒற்றுமையே அவசியம். பிரிந்து நிற்பது வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் எனத்தெரிவித்தார்.
அத்தோடுஇ தமிழர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பான நிலையில் உள்ளதென்றும்இ சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமெனச் சுட்டிக்காட்டிய அவர், கனடா, பெல்ஜியம் போன்ற நாடுகள்போல் சமஷ்டி முiறையிலான அதிகாரப் பகிர்வுக்கே தான் வாதாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.