பிரதமருடன் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா-வும் உடனிருந்த நிலையில், அவரும் ராம்நாத் கோவிந்திற்கு சால்வை அணிவித்து கைலாகு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்திய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து, இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்த ராம்நாத் கோவிந்திந்து பா.ஜ.க. சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவிக்கையில், நான் ஜனாதிபதியாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஒருபோதும் செயற்படவில்லை. ஆனால், இந்த சமுதாயத்திற்கும், நாட்டிற்குமான எனது அர்ப்பணிப்பு என்னை இந்த உயர்ந்த இடத்தில் நிறுத்தியுள்ளது என்றார்.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்தின் சொந்த ஊரான கான்பூரில் மக்கள் பெரும் ஆரவாரத்துடன், வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.