விவசாயிகளுக்கு சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல உணவு பொருட்களை நாட்டில் உற்பத்தி செய்து உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்.
மொரகஹாகந்த நீர்தேக்க திட்டத்தின் கீழ் அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வடமேல் மாகாணத்தில் 700 குளங்கள் புனரமைக்கப்படும்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.