கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டொனெஸ்க் பகுதியிலிருந்து வடக்கே அமைந்துள்ள அவ்டிவ்காவில் உக்ரைனிய இராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று மேற்படி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் தொடர்பில் கிளர்ச்சியாளர்களும் அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும் உக்ரைனிய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து உறுதிப்படுத்தவில்லை.
கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதன் விளைவாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு உக்ரைன் போரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அதேவேளை 1.6 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற போரின் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மின்ஸ்கில் போர்நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் இருதரப்பினராலும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.