தாயின் மார்பில் குழந்தை எட்டி உதைத்தாலும் தாயின் அன்பு என்றென்றும் மாறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பற்றி வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வித்தகவிழா 2017 இல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலமைச்சர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில், தான் கொழும்பில் நீதியரசராக இருந்த காலத்தில் சுமந்திரன் தன்னிடம் கல்வி கற்றவர் எனவும், தற்போது இருவரும் அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பதாகக் குறிப்பிட்ட வடமாகாண முதலமைச்சர், சுமந்திரன் தன்னை வெறுத்து பல கருத்துக்களைக் கூறி வருபவராக இருந்தாலும் தான் அவரின் நலனில் நாட்டமுள்ளவனாகவே நான் இன்றும் இருந்து வருகின்றேன் எனத்தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது விமர்சனங்கள் என்னை எதுவும் செய்துவிடவில்லையெனத் தெரிவித்த அவர், தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இரண்டு பிரதான நாழிதழ்கள் தான் சுமந்திரனை மட்டும் குறிப்பிட்டு அவரைத் தான் மகன் என அழைத்ததாகச் செய்தி வெளியிடுவர் எனவும் உதயன் மற்றும் காலைக்கதிர் நாளிதழ்களைச் சாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.