யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்டதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து இன்று தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாது என தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை நல்லூர் வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் காயமடைந்ததுடன், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து இன்று வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்குமாகாண சட்டவாளர்களும் இச்சம்பவத்தைக் கண்டித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளதுடன், இன்றைய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் பல அமைப்புக்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.