நேற்று முன்தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்ட நிலையின் இன்று மீண்டும் ட்ரல் அட் பார் முறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியின் பிரத்தியேக அறையில் இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம், ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியாழ் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் காவல்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோரிடம் சாட்சி விசாரணைகள் நடைபெறும் என கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் முறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்ட தீர்ப்பாயத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் , நேற்று முன்தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் காயமடைந்ததுடன், ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.