புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியொன்றில் அமைச்சர் விஜயகலா சுவிஸ்குமாரை பாதுகாக்க முயற்சிக்கும் சம்பவம்தொடர்பாக ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி வித்தியாவின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை தப்ப வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்திருந்த போது திருமதி விஜயகலா மகேஸ்வரன் மக்களிடமிருந்து அவரை பாதுகாக்க முயற்சித்த காணொளியை நீதிபதிக்குக் காண்பித்தனர்.
இதன்போது, நீதிபதி குறித்த காணொளி தொடர்பாக விசாரணை நடாத்தி அடுத்த வழக்குத் தவணையின்போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் ஜெயசிங்கவை எதிர்வரும் 8ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.