ஐரோப்பிய ஒன்றியப் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் இன்று விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பாலஸ்தீனத்தின் கமாஸ் அமைப்பின் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்துவதற்கான எந்தவொரு துப்புக்களும் கிடைக்காததால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் 22 அமைப்புக்கள் மற்றும் 13 தனிநபர்களுக்கு தடை விதித்திருந்தது.
இந்தப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2006ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்டது.